செயின் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது!!!

crime-arrestபட்டுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸôர் திங்கள்கிழமை காலை இங்குள்ள தேரடித் தெருவில் ரோந்து சென்றபோது அங்கு நின்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.இதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவர் காலனியைச் சேர்ந்த சேகர் மகன் இளையராஜா (26) என்பதும், இவர் 6.11.2015 இரவு பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் நடந்து சென்ற நேரு நகரைச் சேர்ந்த துணி வியாபாரி துரைராஜ் மனைவி செல்வராணியிடம் (45) 9 பவுன் செயினையும், 9.12.2015 இரவு ஆலம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் மனைவி பபிதாவிடம் (27) 7 பவுன் செயினையும் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.இதையடுத்து இளையராஜாவை போலீஸôர் கைது செய்து, அவரிடமிருந்து 16 பவுன் நகைகளை மீட்டனர்.

Close