அதிரை பழஞ்செட்டித்தெரு AFG நண்பர்களால் 50 ஏழைகளுக்கு உணவு மற்றும் மாற்றுத்திறனாளிக்கு மிதிவண்டி வழங்கல் (படங்கள் இணைப்பு)

afgஅதிராம்பட்டினம், டிசெம்பர் 16: அதிரை பழஞ்செட்டித்தெருவில் AFG (ALL FRIENDS GANG) என்னும் பெயரில் நண்பர்கள் குழுவை அப்பகுதி இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நண்பர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அதிரை மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள 50 ஏழைகளுக்கு மதிய உணவும், ஒரு மாற்றுத்திறனாளி நபருக்கு ஒரு மிதிவண்டியும் வழங்கியதுடன் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த வீடுகளுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

நண்பர்கள் தினத்தை தவறான கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தாமல் நல்ல காரியங்களுக்காக செலவளிக்கும் AFG நண்பர்கள் குழுமத்திற்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close