பட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

9a0fe904-984d-4e05-a0f4-1ed03462136f_S_secvpf.gif
பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிச. 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோருக்கு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், உருளை வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.எனவே, தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் அதை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

Close