உலகை ஆளப்போகும் ‘லை-பை’!!!

Want create site? Find Free WordPress Themes and plugins.

Li-fi-vs-wifi-

அதிவேக இணையப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் அறிமுகமாகியுள்ள லை-பை (Li-Fi) தொழில்நுட்பம் நல்ல வரவேற்புப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படும் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில்நுட்பம்தான் இந்த லை-பை. இது ‘வை-பை’ (Wi-Fi) -ஐ விட 100 மடங்கு வேகமாக செயல்படக்கூடியது. வை-பையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளைக் காட்டிலும் லை-பை 10 ஆயிரம் மடங்குகள் பெரிதாகும்.

லை-பை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண எல்.இ.டி. மின்விளக்கு, இணைய இணைப்பு மற்றும் போட்டோ டிராக்டர் ஆகியவை போதும்.ஒரு வினாடிக்கு 1 ஜி.பி. வரையிலான வேகத்தில் இணையப் பயன்பாட்டைப் பெற லை-பை தொழில்நுட்பம் வகை செய்கிறது.ஒளிக்கற்றை வாயிலான இந்த லை-பை இணையப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம், அலுவலகம் ஒன்றில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் அடுத்துவரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களைப் பெருமளவில் சென்றடையும் என இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனத்தினர் கூறுகின்றனர்.வை-பை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைகள் பயன்படுத்தப்படுவதால் அதை ஆஸ்பத்திரிகள், விமானங்கள் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்குத் தடை உள்ளது. லை-பை தொழில்நுட்பம் மூலம் அந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம் என எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெரால்டு ஹாஸ் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
வீட்டில் உள்ள வை-பை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணுச் சாதனங்கள் ஒரு காரணம்.வெளிநாடுகளில் டிசம்பர் மாதத்தில், குறிப்பாக பெரும்பாலானோரின் வீடுகளில் வை-பை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அதற்குக் காரணம், வீடுகளில் உள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப்படும் எல்.இ.டி. மின்விளக்குகள்தான் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இங்கிலாந்தில் தொலைத்தொடர்புகளின் தடங்களைக் கண்காணிக்கும் அமைப்பான ஆப்காம், வை-பையின் உறுதித்தன்மையைச் சோதிக்க அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author