அதிரையில் TNTJ நடத்திய இரத்ததான முகாமில் பலர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் தஞ்சை காளி இரத்த வங்கியுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  இணைந்து நடத்தும் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று காலை 10 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அதிரை TNTJ கிளை தலைவர் A.பக்கிர் முஹம்மது தலைமை தாங்கி வருகிறார். குருதிக்கொடை வழங்க பலர் ஆர்வமுடன்  வருகைதந்துள்ளனர்.

மேலும் இம்முகாம் இன்று பகல் 2:30 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்யுமாறும் அதிரை TNTJவினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close