அதிரையில் ஆட்சியாளர்கள் மீது அதிர்ப்தி அடைந்து தானாக முன்வந்து சாக்கடை அள்ளிய தெருவாசி! (படங்கள் இணைப்பு)

sakஅதிரை திலகர் தெரு ஈ.சி.ஆர் சாலைக்கு செல்லும் பாதையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இப்பகுதி மக்களின் தினசரி பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தான் இந்த கழிவு நீர் கால்வாய் பிரச்சனை. தீர்க்க முடியாத அரசியல் காரணங்களால் தீர்க்க முடியாத பிரச்சனையாக இந்த பிரச்சனை மாறியுள்ளது. இது குறித்து வார்டு கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் என மாறி மாறி புகார் தெரிவித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனை அடுத்து அதிர்ப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த கஞ்சி கடை சாகுல் ஹமீது அவர்கள் தானாக முன்வந்து மூன்று மாதங்களாக சுத்தம் செய்யாத கால்வாயை சுத்த செய்தார்.

Close