கூகுள் உங்களை கண்கானிக்கின்றது!!!

Want create site? Find Free WordPress Themes and plugins.

google_lupaஇன்றைய காலக்கட்டத்தில் நெட் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கின்றது. நெட்டை நான் பயன்படுத்துவதில்லை என்றும் யாரும் சொல்ல முடியாது. இதில் கூகுள் சேர்ச், மெயில் மூலம் தகவல் பரிமாற்றம் போன்ற பல நிகழ்கின்றன. கூகுள் கணக்கை வைத்து நீங்கள் பார்க்கும் வெப்ஸைட்டை பற்றிய தகவல்கள், உங்கள் தொடர்புகள், நாட்காட்டி, கூகுள் வாய்ஸ் வரலாறு போன்றவற்றை பற்றி இங்கு பார்க்க போகின்றோம். ஆக கூகுள் கணக்கை பயன்படுத்தி நீங்கள் எதை எல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி இங்கு அலச போகிறோம்.

லாக் இன் செய்த கணக்குக்கான தகவல்கள் :கூகுளை பயன்படுத்தி நீங்கள் லாக் இன் செய்த தகவல்களை பெற முடியும். நீங்கள் லாக் இன் செய்ய பயன்படுத்திய டிவைஸை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இந்த பயன்பாட்டிற்கு கூகுள் செக்யூரிட்டியை பயன்படுத்தி கொள்ள முடியும்.

கூகுள் டேஷ்போர்ட்: ஒரே இடத்தில் உங்கள் கூகுள் கணக்கிற்கான தொகுப்பை நீங்கள் பார்க்க கூடிய அற்புதமான அம்சம் தான் கூகுள் டேஷ்போர்ட். இதன் மூலம் உங்கள் calendar records பற்றிய தகவல்களையும், sync bookmark, cloud printed documents போன்ற அனைத்து விதமான பதிவுகளையும் அறிந்து கொள்ள முடியும். ஆகையால் டேஷ்போர்டை பார்த்து தகவல்களை பெற்று கொள்ளுங்கள்.

வாய்ஸ் ஹிஸ்டரி: உங்கள் தகவல் சேகரிப்பிற்காக நீங்கள் கொடுத்த கட்டளைகளை பற்றிய தகவல்களை இந்த வாய்ஸ் ஹிஸ்டரியின் மூலம் அறிந்து கொள்ளலாம். மற்றவர்கள் உங்களுக்கு ஆண்ட்ராய்ட் வாய்ஸ் கட்டளையின் மூலம் கொடுத்த தகவல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் இது வேண்டாம் என்று நினைத்தால் டெலிட் கூட செய்ய முடியும்.

நீங்கள் கிலிக் செய்த கூகுள் விளம்பரம்:கூகுளில் நீங்கள் கிலிக் செய்த விளம்பரங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் கிலிக் செய்த விளம்பரங்கள் அதன் வகைகளின் படி வரிசை படுத்தி வைக்க பட்டிருக்கும். ஆக இதை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.

வெப் மற்றும் ஆப்ஸின் செயல்பாடு :இது மேலும் ஒரு சிறப்பு அம்சம் என்றுதான் கூற வேண்டும். இதன் மூலம் கூகுள் ஆப்ஸ்களில் பயன்படுத்திய கீ-வார்த்தைகளின் வரலாற்றை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகமாக பயன்படுத்திய தேடுதலுக்கு பயன்படுத்திய வார்த்தைகளை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

லொகேஷன் வரலாறு: அடுத்த மிக முக்கியமான அம்சம் location history. காணாமல் போனவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த லொகேஷன் வரலாறு மிகுதியாக பயன்படுகின்றது. அவர்களை பற்றிய தகவல்களை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author