உள்ளூர்

FLASH NEWS: அதிரையில் சாலை விபத்து! A.J.ஜும்மா பள்ளி இமாம் ஹாஷிம் காயம்!

wpid-emergency-and-accident-sign1774530171.jpgஅதிரை A.J.ஜும்மா பள்ளியில் இமாமாக இருப்பவர் ஹாஷிம். சொந்த வேலை காரணமாக தனது ஸ்கூட்டரில் முத்துப்பேட்டைக்கு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிரையிலிருந்து சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிரையை அடுத்த கருங்குளம் வளைவில் சென்றுக்கொண்டிருக்கும் போது குறுக்கே நாய்  சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்த இவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

இதனை அடுத்து தகவல் அறிந்து அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் இவரை மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அளவில் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

அன்னார் உடல் நலம் பெற துஆ செய்வோமாக.

Show More

Related Articles

Close