புனித கஃபாவை சுற்றியுள்ள மதாப் பாலம் விரைவில் அகற்றப்படவுள்ளது!

Want create site? Find Free WordPress Themes and plugins.

tawafபுனித காபாவைச் சுற்றியுள்ள ‘மதாப்’ பாலம் அகற்றப்படவுள்ளதாக Arab News செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள பாலம் 48,000 யாத்திரிகளுக்குப் மட்டும் போதுமானதாகஉள்ளதால் தற்போதைய பாலம் அகற்றப்பட்டு விரிவாக்கப்படுகின்றது. இன்றும் மூன்று மாதங்களில் ஆரம்பமாகும் புதிய பாலத்தின் விரிவாக்கப் பணிகள் 2016 ரமழான் மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படும் என்றும் இப் பணிகளுக்காக 15,000 ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் அச் செய்தி கூறுகின்றது.

இப் புதிய விரிவுபடுத்தப்பட்ட பாலத்தில் ஒரு மணித்தியாலத்துக்கு சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் யாத்திரிகள் தவாப் (கஃபா ஆலயத்தை வலம் வருதல்) செய்யக் கூடியதாக இருக்கும். புதிய பாலத்தின் விரிவாக்கத்தினால் தரையில் ஊன்றப்பட்டுள்ள தூன்களின் எண்ணிக்கையும் 30% குறைவடைந்து, தரையில் தவாப் செய்வோருக்கு இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author