அடுத்த 6 மாதங்களுக்கு இவர் தான் ஹீரோ!

Want create site? Find Free WordPress Themes and plugins.

17-1447764049-rajesh-lakhani--s--6003தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டை சேதம் அடைந்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்று வருகிறது.  குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் இந்த சிறப்பு முகாம் வருகிற 28ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.  தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணிலும் பொதுமக்கள் விண்ணப்பம் செய்யலாம். சென்னையில் 9,500 பேரும்,  காஞ்சிபுரத்தில் 3,274 பேரும், திருவள்ளூரில் 300 பேர், கடலூர் மாவட்டத்தில் 1934 பேர் புதிய வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.  ஜனவரி முதல் வாரம் வீடு வீடாக சென்று புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும். இறுதி பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் விலாசம் தவறாக இருந்தால் கூட மாற்றம் செய்ய  அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி 75 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  தேவைப்படும். இதற்காக பீகார், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய  5 மாநிலங்களில் வருகிற ஏப்ரல் – மே மாதங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல்  ஆணையர்கள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். நேற்று அசாம் மாநிலத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு ஆலோசனை நடத்த தமிழகம்  வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று, மே மாதம் 23ம் தேதி  முதல் சட்டமன்ற கூட்டம்  நடைபெற்றது. அதனால் 2016ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதிக்கு முன்னதாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தி முடித்து, புதிய ஆட்சியாளர்கள் பதவியேற்க  வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகத்தில் தேர்தல் எப்போது நடத்தலாம், எத்தனை  கட்டங்களாக நடத்தலாம் என்பது குறித்து அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன.  தமிழகத்தில் உள்ள கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதால் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. இதன் வேகம் ஜனவரி மாதம் முதல்  இன்னும் அதிகரிக்கும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author