அதிரையின் முக்கிய சாலையை சாக்கடையில் முக்கியது யார்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
olஅல் அமீன் பள்ளியின் முன்புற [பழைய போஸ்ட் ஆபிஸ்] ரோடு – அதிரையின் மிக முக்கிய வீதியாகவும், பொதுமக்கள் நடமாட்டம் கூடிய சாலையாகவும், வாகனங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்து நிலையம், அல் அமீன் மஸ்ஜித் என நிறைந்த பகுதியாகவும், மிக முக்கியமாக நகரின் சுத்தம் சுகாதாரத்திற்கு பொறுப்பான அதிரை பேரூராட்சி அலுவலகமும் இதன் அருகே தான் அமைந்துள்ளதென்றால் நகரின் ஏனைய தெருக்களின் நிலையை எடை போட்டுக் கொள்ள ‘இந்த ஒரு சோறு பதம்’ போதும்.
இந்த சாலையின் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைக்கு பொதுமக்களின் அலட்சியம் ஒரு காரணமென்றால் பேரூராட்சியின் பொறுப்பற்றத்தனமும் கண்டிக்கத்தக்கது. சுத்தம் சுகாதாரத்திற்கு பொறுப்பான பேரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுப்பதுடன், சாக்கடை நீரை தெருவில் விடும் பொதுமக்களை எச்சரித்து கட்டுப்படுத்த வேண்டும். சாக்கடைகள் முறையாக ஓடுவதற்கான வழிவகைகளை செய்து தர வேண்டும். இனியும் அலட்சியம் தொடர்வது யாருக்கும் நல்லதல்ல என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உணர்வது நல்லது.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author