ஊடக துறையில் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் இஸ்லாமிய ஊடகத்துறையின் உலக மாநாட்டில் வலியுறுத்தல்!

ஊடக துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன என்பதை ஆரய்வதற்காக சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள கிங் காலித் பல்கலை கழகம் ஒரு உலக மாநாட்டை நடத்தியது

அதில் உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த முஸ்லிம் பத்திரிகையாளர்கள் ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்
 
நபிகள் நாயகத்தின் மண்ணறையை மதீனத்து பள்ளியில் இருந்து பிரித்து தனிமை படுத்த வேண்டும் என்று அண்மையில் ஒரு ஆய்வாளர் கூறியிருந்தது இந்த மா நாட்டில் மிக பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது

இதனை தொடர்ந்து நபிகள் நாயகத்தின் மண்ணறை எந்த இடத்தில் அமைந்துள்ளதோ அதே இடத்தில் தான் உலகம் அழியும் வரையிலும் அந்த மண்ணறை இருக்கும் என்றும் அதை மாற்றுகின்ற எந்த திட்டமும் சவுதி அரசிடம் இல்லை என்று அந்த மாநாட்டில் உறுதி கூறபட்டது

இதனை தொடர்ந்து உடக துறை நோக்கி விவாதங்கள் திரும்பியது

பொது வாககவே ஊடக துறையில் முஸ்லிம்கள் பலகீனமா இருப்பதாகவும் இதனை மாற்றுவதர்கு ஊடக துறை படிப்புகளை முஸ்லிம்கள் அதிகம் விரும்பி படிக்க வேண்டும் என்று அதன் மூலம் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் ஏரளமான நண்மைகளை செய்ய முடியும் என்றும் சூடானில் இருந்து வந்திருந்த ஒரு ஆய்வாளர் தெரிவித்தார் இதனை பலர்களும் வழி மொழிந்து அதர்கான சரியான திட்டங்களை தீட்டி செயலில் இறங்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்

இதனை தொடர்ந்து ஊடக துறைபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் அதிகம் உருவாக்க வேண்டும் என்றும் அதனால் ஏர்படும் பலன்களை மக்களுக்கு சரியாக விளக்க வேண்டும் என்றும் கோரிக்க்கை வைக்க பட்டதோடு அங்கு வந்திருந்த மூத்த ஊடக துறையை சார்ந்தவர்கள் இளையவர்களுக்கு சிறந்த பயிர்ச்சிகளை அளித்தனர்

இது சவுதி அரேபியாவில் நடந்த நிகழ்வாக இருந்தாலும் இந்திய முஸ்லிம்களுக்கும் இதில் பாடம் இருக்கிறது

இந்தியாவை பொறுத்துவரை முஸ்லிம்களுக்கு என்று வலுவான எந்த ஊடகமும் இல்லாத தால் முஸ்லிம்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகுவது உலகின் கண்களுக்கு முறையாக கொண்டு வராமலேயே புதைக்க படுகிறது

இந்த நிலை மாற வேண்டுமேயானால் நாமும் ஊடக துறையில் தனி கவனம் செலுத்துவதும் நமது எதிர்கால சந்ததியிடம் ஊடகம் தொடர்ப்பான விழிப்புணர்வை உருவாக்குவதும் அவசியமாகும்.

நன்றி  : சையது அலி பைஜி

Advertisement

Close