COMPUTER PIRAI: வாட்ஸ் அப்பில் விரைவில் வீடியோ கால்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

wvcபரிசோதனை அளவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் வீடியோ காலிங் வசதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இணையதளத்தில் வெளியாகியுள்ள சில ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் வாட்ஸ்அப்பில் வீடியோ காலிங் வசதி வெளியிடப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை (v2.12.16.2) பயன்படுத்தும் சில ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வீடியோ காலிங் கிடைத்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள ஸ்கிரீன்ஷாட்களில் இடது பக்கம் மியூட் பட்டனும், நடுவில் அழைப்பினை துண்டிக்கும் பட்டனும், வலது ஓரம் கேமராவிற்கு செல்லும் பட்டனும் உள்ளது.

எனவே, விரைவில் ஆப்பிள் போனை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.

வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதியானது ஆப்பிளின் பேஸ்டைம் அப்ளிகேஷனுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author