வாகன ஓட்டிகளே!!! SPEED BLINDNESS (வேகக் குருட்டு) என்றால் தெரியுமா??

speed blindnessதிடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீதுமோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.

மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் போது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான்.

நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்…!

Close