சவூதி அரேபியாவில் பணிபுரிபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

சவூதி இகாமா இனிமேல் Resident ID என்று பெயர் மாற்றப் பட்டு 5 வருடங்களுக்கு வழங்குவதற்கான திட்டம் உள்ளதாக பாஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் டைரக்டர் ஜெனரல் மேஜர். சுலைமான் யஹ்யா கூறியுள்ளார். அதனால் வெளிநாட்டு நாட்டினர் (முதலீடு செய்பவர்கள், வருகை தருபவர்கள், வேலை செய்பவர்கள்) மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் சவூதி அரேபியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், நல்ல திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் சவூதியில் தொடர்ந்து பணிபுரியவும் சவூதியில் தொழில் வளர்ச்சியை பெறுக்கவும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இத்திட்டம் எப்போது அமலுக்கு வருகிறது என்று அவர் கூறவில்லை. 

இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் சவூதியில் பணிபுரிபவர்களின் பாஸ்போர்டுக்கு 10 ஆண்டுகள் வரை காலவரையை நீட்டுக்கும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சவூதி அரசின் இந்த புதிய திட்டங்களால் லண்டன், அமேரிக்காவுக்கு செல்லும் எண்ணம் கொண்டவர்கள் சவுதி அரேபியாவுக்கும் பணிபுரிவதற்கு வரை வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  
courtesy: Arab news, Translate:Adirai pirai

Advertisement

Close