பிறையின் பார்வை: மிருகங்கள் போல் வாழும் மனிதர்கள் மத்தியில் மனிதர்கள் போல் வாழும் மிருகங்கள்!

படிப்பினை:

சாலையில் ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தால் அதனை கண்டு கொள்ளாமல் செல்லும் கல் நெஞ்சம் படைத்தோர் சிலர் உலகில் உண்டு அவர்கள் பாடம் கற்று கொள்ளும் விதமாய் மெக்சிகோவில் ஒரு நாயின் நடவடிக்கை அனைவரின் மனதையும் கலங்க வைத்துள்ளது. மெக்சிகோவில் இரண்டு நாய்கள் ஜோடியாக சாலையை கடந்த போது ஒரு நாய் மட்டும் வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்தது. நாய் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. இதனை கண்ட மற்றோரு நாய் துடி துடித்து அடிபட்ட‌ நாயின் உடலை சுற்றி சுற்றி வந்து இழுத்து சென்று காப்பாற்ற முயற்சி செய்தது.

ஆனால் அடிபட்ட நாயின் உயிர் பிரிந்திருந்தது. பிறகு நாயின் உடலை அங்கிருந்து அகற்ற தொடர்ந்து துள்ளி துள்ளி முயற்சி செய்து கொண்டே அருகிலேயே உட்கார்ந்து இருந்தது. காண்போரின் மனதை உருக வைக்கும் இந்த நிகழ்வை அவ்வழியே வந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அவரே இறந்த நாயின் உடலை சாலையில் அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் வெளியாகியுள்ள‌ இவ்வீடியோ பலரை கலங்க வைத்துள்ளது. 

தினகரன் செய்தி

பிறையின் பார்வை:

ஆறு அறிவு கொண்ட மணிதர்களாகிய நாம் ஒரு சக்தி மனிதன் நடு ரோட்டில் அடிபட்டு கிடந்தால் கூட கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கிறோம். இறைவன் நமக்கு ஆறாவது அறிவை வைத்து படைத்தது பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதற்க்காக. இந்த பகுத்தறிவில் தான் இரக்கம், கவலை, மகிழ்ச்சி, அழுகை, சிரிப்பு கோபம் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் உள்ளன. ஆனால் இந்த பகுத்தறிவு உணர்ச்சிகளுள் இரக்கம் என்ற உணர்ச்சி மட்டும் இன்றைய பெரும்பாலான மக்களிடம் தெண்படுவதில்லை.

யார் எப்படி போனால் நமக்கென்ன என்று இரக்கமில்லாமல், சமுக சிந்தனை இல்லாமல் சுயநலத்தோடு ஐந்தறிவு ஜீவன்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த உணர்ச்சிகள் கடவுளால் அளிக்கப்படாத ஒரு 5 அறிவு உயிரினங்களில் ஒன்றான நாய் மனிதர்களிடம் மறைந்து வரும் அந்த இரக்கத்தை சக்தி உயிரினத்திடம் காட்டி மனித தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது.

மிருகங்கள் கூட தங்கள் பசியை தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு சாப்பிட்டுவிட்டு வேட்டையாடுவதை நிறுத்திக்கொள்ளும். ஆனால் மனிதர்களான நம்மில் பலர் தங்களிடம் போதுமான செல்வங்கள் இருந்தும் பிறர் செல்வத்தை அபகரிப்பது, முறைகேடான முறையில் ஏமாற்றுவது மிருகங்களை வுட மோசமான முறையில் நடந்துக்கொள்கின்றனர்.

என்றைக்கு ஒரு மனிதனுக்கு இரக்கமும் போதும் என்ற மனமும் வருமோ அன்றைக்கு தான் இப்புவி சுவனமாகும்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close