செடியன் குளத்திற்கு ஆற்று நீர் வருகை !(படங்கள் இணைப்பு)

அதிரையில் உள்ள குளங்களுக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தீவிரமாக செயல்பட்டனர்.இதற்கு முன்னர் ஆலடி குளம், காட்டு குளம்,மரைக்கா குளம் ,மன்னப்பாங் குளம்,கரிசல் மணி ஏரி,செக்கடி குளம் போன்ற குளங்கள் ஆற்று நீர் மூலம் நிரப்பபட்டது.

இதனையடுத்து செடியன் குளத்திற்க்கும் தண்ணீர் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை தலைவர் பிச்சை அவர்கள் தீவிர முயற்சியில் இடுப்பட்டனர்.முயற்சியின் பலனாக நேற்று இரவு 11.30 மணிக்கு முதல்சேரி வழியாக ஆற்று நீர் செடியன் குளத்திற்கு வந்து அடைந்தது. 


Advertisement

Close