லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எலி: 6 மணி நேரம் தவித்த பயணிகள்!!!

download (1) copyமும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்று இருப்பதை விமானப்பயணிகள் பார்த்து புகார் தெரிவித்ததால், தீவிர பரிசோதனைக்குப் பின்னர் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

அகமதாபாத்தில் இருந்து மும்பை வழியாக லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம், மும்பை விமான நிலையத்தில் இருந்து 12.50 மணியளவில் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் கேபினுக்குள் எலி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிவதை பார்த்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து விமானம் புறப்படுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விமானத்திற்குள் எலி இருப்பது உறுதி படுத்தப்படவில்லை என்றாலும், பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது என்று ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து தொழில்நுட்ப குழு விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், விமானம் முழுவதும் சுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close