TAMIL NADU

துத்துகுடிமாவட்டம் கோவில்பட்டி அருகே இரும்பு கம்பீ தாக்கியதால் பர பரப்பு!!

20151230204057 copyதுத்துகுடிமாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலை அடுத்த ஆண்டிபட்டியH ைச் சேர்ந்தவர், வள்ளிராஜ் (வயது 42) கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி தெய்வானை. இவர்களுக்கு ஜெயமாலினி (7), ஜெயனிதா (4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

ஜெயமாலினி, கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று காலையில் ஜெயமாலினி, ஜெயனிதா ஆகிய 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். பெண்களின் கூந்தலில் சிக்கலை எடுக்க பயன்படுத்தும் கூர்மையான இரும்பு கம்பியை ஜெயமாலினி கையில் வைத்து இருந்தாள். அவள் விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாள். இதனால் அந்த கூர்மையான இரும்பு கம்பி, ஜெயமாலினியின் வலது பக்க கழுத்தில் பாய்ந்து இடது பக்கமாக வெளியே தெரிந்தது. இதனால் அவள் அலறி துடித்தாள்.

உடனே பெற்றோர், அக்கம் பக்கத்தினர் பதறியபடி ஓடிவந்தனர். ஜெயமாலினியை சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள், அவளது மூச்சுக்குழாய், உணவுக்குழாய் வழியாக இரும்பு கம்பி பாய்ந்ததை அறிந்தனர்.

தலைமை டாக்டர் ஸ்ரீவெங்கடேஷ், காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் செந்தில், மயக்கவியல் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் ஜெயமாலினிக்கு சுமார் ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பியை அகற்றினர்.

Show More

Related Articles

Close