Advertisement

' />

ஜமாலு கமாலு!

ஜமால்: வாங்க கமாலு, எங்க ஆளையே பாக்க முடியல! அதிரை பிறை நேயர்கள் நம்மல ரொம்ப நாளா தெடுனாங்களாம்!

கமால்: அதுவா ஜமாலு, 2 மாசமா சென்னைல இருந்தேன். அதான் உன்ன பார்க்க வரை முடியல

ஜமால்: சென்னைல என்ன வேலை?  வந்து எவ்ளோ நாள் ஆகுது?

கமால்: வாப்பாக்கு சுகர் அதிகமாயிருச்சு, அதனால் அங்கயே வெச்சு ட்ரீட்மென்ட் பாத்துட்டு ரெஸ்ட் எடுத்துட்டு 3 நாளைக்கு முன்னாடி தான் ஊருக்கு வந்தோம்.

ஜமால்: வாப்பா இப்ப எப்புடி இருக்கிறாஹ! சுகர்லாம் தேவலையா?

கமால்: ம்ம்ம்! ஏதோ பரவாயில்லை சுகர் வந்தா தப்புறது ஈசி இல்ல! ஊருல பல நாள் கழிச்சு நல்ல மழைன்னு கேள்விப்பட்டேன்.

ஜமால்: ஆமாம் ரொம்ப சந்தோசமா இருக்குது. பல வருசங்கள் கழிச்சு நம்ம ஊருல உள்ள குளங்கள் நிறைஞ்சிருக்கு. இது பக்கள் சந்தோசமா  இருந்தாலும் மழை நேரத்துல நம்ம ஊர் சுகாதாரம் ரொம்ப மோசமான போச்சு. தெருவுக்கு தெரு குப்பை, சாக்கடை அடைப்புன்னு ஏகப்பட்ட பிரச்சனை. வெளியே வரவே முடியலாம் ஒரே நாற்றமா இருந்துச்சு!

கமால்: ஆமாம்! நானும் நெட்டுல பாதேன். போட்டொவ பாக்கும் போதே ஒரே அருவருப்பாக இருந்துச்சு, அதுவும் எங்க தெருவுல ரொம்ப மோசமாம்.

ஜமால்: இதுக்கு கவுன்சிலர்களையும், சேர்மேன் அவர்களை மட்டும் குறை சொல்லி ஒன்னும் ஆகப்போரது இல்ல! பொதுமக்களும் விழிப்புணர்வுடன் குப்பைகள் கொட்டாம இருக்கனும்.

கமால்: பொதுமக்களை குப்பைகள் கொட்டக் கூடாதுன்னா அவங்க எங்க போய் கொட்டுவாங்க! வீட்டுக்குள்ளேயா சேர்த்து வைக்குறது. துப்பரவு ஊழியர்கள் தான் ஒழுங்கான வந்து அள்ளனும்.. இதுனால பாதிக்கப்படுறது நம்ம ஊர் சுகாதாரம் மட்டும் தான்.

ஜமால்: எது எப்படியோ விடு! சென்னையில் இருந்து என்ன வாங்கிட்டு வந்த?

கமால்: அது ஏன் கேட்குறா? மொவன் ஆசப்பட்டான்னு ஒரு சைத்தான் வாங்குனேன்.

ஜமால்: சைத்தானா?

கமால்: அடி இந்த கால சைத்தான் டிவி வாங்குனேன். சோனி எல்.ஈ.டி டிவி 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கொண்டுட்டு வந்தேன். வந்துல இருந்து மகனும் சரி மனைவியும் சரி என்ன பாக்குறது இல்ல.

ஜமால்: ஏம்பா இப்புடி தப்பு பண்ணிட்டியப்பா!

கமால்: ஆமாம் ஜமாலு! பெரிய தப்பு பண்ணிட்டேன். அந்த சைத்தான் வந்ததுல இருந்து மொவன் ஒழுங்கா மதர்சா, டியூசன் போறதில்ல! மனைவி காலைல 11 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 10 மணி வரை வரை எல்லா சீரயலையுன் ஒன்னு விடாமல் பார்க்குறா!

இந்த டிவி தொல்லை தாங்க முடியல!

ஜமால்: அது கூட பரவாயில்லை! எங்க வீட்டுல எப்பவுமே சொல்வதெல்லாம் உண்மை அப்புடிங்கற நிகழ்ச்சி தான் ஒடுது. ஒவ்வொரு குடும்பம் பிரியுறது, சேருரது இதெல்லாம் டிவி ல போட்டு காட்டுறாங்க.

இந்த காலத்துல மீடியாக்கள் தங்களோட பொறுப்புகளையெல்லாம் மறந்துட்டு பாப்புலாரிட்டிக்காக இது மாதிரி மானம் கெட்ட நிகழ்ச்சியில் நடத்தி காசு சம்பாதிக்குறாங்க. என்னத்த சொல்ல, சென்னை பக்கத்துல விளை நிலத்தை அழிச்சதால விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துனாங்க! அத செய்தியா போடாம சென்னை ஐ.ஐ.டி  மாணவர்கள் நடத்திய முத்தப் போராட்டத்தை வளைச்சு வளைச்சு போட்டோ புடிச்சு செய்தியா போட்டாங்க.

கமால்: ஆமாம் படிக்க பெத்த பிள்ளைகள் மேல நம்பிக்கை வச்சு சென்னைல பெரிய காலேஜுல  படிக்க வெச்சா அவங்க அத மறந்துவிட்டு கலாச்சாரத்தை சீரழிக்குற மாதிரி முத்தப் போராட்டம் நடத்துராங்க. என்னத்த சொல்ல. இன்றைய இளைஞர்கள் தான் நாளைய எதிர்காலம் அப்புடின்னு சொன்னாங்க, ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலை முத்தத்துக்காக போராடும் அவலம்.

ஜமால்: நம்ம பேசுறதுனால எந்த பயனும் இல்ல! இதுலாம் அவரவர்கள் சிந்திக்கனும்! செயல்படனும்!

கமால்: அதுவும் சரிதான்! நேரமாக போச்சு போயிட்டு வரேன். டிவிய எடுக்கனும்.

குறிப்பு: இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்பட்டது இல்லை!

Advertisement

Close