அதிரை பள்ளி மாணவிகள் தங்கம் வென்று சாதனை!

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 6 கல்வி மாவட்டங்களுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டி தஞ்சையில் நடந்தது. 

இப்போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.இதில் அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாண விகள் 14 வயதுடையோருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் அம்சவள்ளி, 46 கிலோ எடைப்பிரிவில் பவித்ரா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். 

46 கிலோ எடைப்பிரிவில் ராஜேஸ்வரி, 37 கிலோ எடைப்பிரிவில் காயத்ரி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான மெர்லின்சுனித்தா 37 கிலோ எடைப்பிரிவிலும், யோகப்பிரியா 50 கிலோ எடைப்பிரிவிலும், ஸ்ரீநிதி 53 கிலோ எடைப்பிரிவிலும் வெள்ளிப்பதக்கங்கள் பெற்றனர். 30 கிலோ எடைப்பிரிவில் அஜிட்டா வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.

இப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகள் ஜனவரி 2015ல் தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபு, தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர், நகரா ட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

courtesy:dinakaran

Advertisement

Close