அதிரை சி.எம்.பி.லேன் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் நோய் பரவும் அபாயம்!

அதிரை 20வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சி.எம்.பி.லேன் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அப்பகுதியினர்களால் குப்பைகள் கொட்டப்படுகிறது. நாள்தோறும் கொட்டப்படும் இந்த குப்பைகளால் அப்பகுதியில் குப்பைகள் பரவி அப்பகுதியெங்கும் காணப்படுகிறது.

இதனால் அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் அப்பகுதியில் கொசுத்தொலை அதிமாகியுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close