தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுத்தீன் திடீர் பதவி நீக்கம்!

தமிழக சட்டசபை செயலாளரான ஜமாலுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு மேலும் 5 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு வரை ஜமாலுதீன் அப்பதவியில் நீடிக்க் முடியும். இந்த நிலையில் திடீரென ஜமாலுதீன் இன்று சட்டசபை செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
“தமிழக முதல்வராக இருந்து 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் , அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது” என்று அண்மையில் தமிழக அரதழில் வெளியிடப்பட்டது.
இந்த அரசிதழ் வாசகங்கள் தொடர்பான முரண்பாட்டால் அவர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

courtesy: oneindia.com

Advertisement

Close