அதிரையில் தண்ணீருடன் கம்பீரமான காட்சி தரும் மண்ணப்பன் குளம்! (படங்கள் இணைப்பு)

அதிரை குளங்களுக்கு கடந்த 2மாதங்களாக ஆற்று நீர் திறந்து விடப்பட்டது. இதுபோல் அதிரை வண்டிப்பேட்டை பெட்ரோல் பங்கு பின்புறம் அமைந்துள்ள மண்ணப்பன் குளத்திற்குன் தண்ணீர் திறந்துவைக்கப்பட்டது. இதனை அடுத்து இக்குளம் ஏறக்குறைய தண்ணீர் நிரம்பி கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதிரையின் மிகப்பெரிய குளங்களுள் ஒன்றான இது வரலாற்று சிறப்புகள் நிறைந்தது.

மல்லிப்பட்டினம் மனோராவில் இருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் சுரங்கப்பாதை இக்குளத்தை கடந்து செல்கிறது. இக்குளம் கடந்த பல அண்டுகளாக அதிரையில் பொய்த்துப் போன மழையால் ஏரக்குறைய 6,7 ஆண்டுகளாக இக்குளம் தண்ணீர் இன்றி வறட்சியுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close