அதிரை பிறையில் காணாமல் போனதாக பதியப்பட்ட திருச்சி சிறுவன் பக்கத்து வீட்டு பெண்ணால் கடத்தப்பட்டான்! திடுக்கிடும் உண்மை தகவல்கள்!

திருச்சி தென்னூர் பென் ஷனர் காலனி, தர்கா கால னியை சேர்ந்தவர் சகின்ஷா (30). ஆட்டோ டிரைவர். இவ ரது மனைவி அனீஸ்பாத்திமா (28). இவர்களது மகன் அர்ஜத்கான் (2). இங்கு ஒரு தர்கா உள்ளது. கடந்த 4ம் தேதி மாலை 4 மணியளவில் சகின் ஷா, தொழுகைக்காக அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார். அனீஸ்பாத்திமா வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். மகன் அர்ஜத்கான் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான். 

இந்நிலையில் தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்த சகின்ஷா, மகனை காணாதது கண்டு மனைவியிடம் கேட் டார். அவர் தர்கா அருகே விளையாடி கொண்டிருந்தான் என கூறியதையடுத்து அங்கு சென்று தேடினர். அங்கும் மகனை காணாததை அடுத்து பதறிய சகின்ஷா காலனி முழு வதும் உள்ள வீடுகளில் தேடி னார். அர்ஜத்கானை காண வில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இச்செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை பிறையில் பதியப்பட்டது. 

விசாரணை குறித்து போலீ சார் கூறுகையில், சகின்ஷா தந்தை ஓய்வு பெற்ற எஸ்ஐ ஷாஜகான் என்பவரின் 2 மனைவிகளில் முதல் மனைவி யின் மகன் சகின்ஷா. தற்போது 2வது மனைவியுடன் தோகைமலையில் ஷாஜகான் வசித்து வருகிறார். இவர்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வரு கிறது. இதன் காரணமாக குழந்தை கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் எவ் வித முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் சகின்ஷா வீட்டுக்கு முன் உள்ள ஒரு வீட் டின் முன் பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளது. அவற்றில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் திருச்சியில் குழந்தை களை கடத்தும் கும்பலை சேர்ந்த 10 பெண்களிடம் விசா ரணை நடத்தினர்.

இந்த விசாரனையில் இவர்களின் வீட்டருகே வசிக்கும் ஜெனிபர் என்ற பெண் கடத்தி சென்று மங்களூரில் அச்சிறுவனை விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Close