DR.Pirai.. மாற்று பிராண்டு மருந்தின் விலை அறிவோம்

 மாற்று பிராண்டு மருந்தின் விலை அறிவோம்

மருத்துவர்கள் நமக்கு மருந்துகள் எழுதும் போது மருந்தின் மூலக் கூறின் பெயரை (DRUGS COMPOUND NAME ) எழுதாமல் பிரான்டின் பெயரையே எழுதுகிறார்கள் .இதில் வியாபார நலன் உள்ளது என நாம் அறிவோம்.

 மருத்துவர் எழுதும் குறிப்பிட்ட பிரான்டு மருந்தைவிட விலை குறைவான அதே வீரியம் கொண்ட பல மாற்று பிரான்டுகள் உண்டு. உதாரணமாக இதய நோயாளிகள் உண்ணும் ERIS நிறுவத்தின் ATORSAVE 40  என்ற மாத்திரையின் விலை 11.50 அதே தன்மையுள்ள DR.REDDYS LAB நிறுவனத்தின் ATOCOR 40 என்ற மருந்தின் விலை வெறும் 0.89 பைசா.

பிராண்டிணை மாற்றுவதால் மருந்தின் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் ஏற்படாது. ம்.ம்.  சரி விலை அதிகமுள்ள பிரான்டிற்கு மாற்று பிராண்டு கண்டு பிடிப்பது எப்படி? அதற்கு தீர்வு உள்ளது, HEALTH CARE PLUS இந்த APP
http://app.ik/BBH?x=s உங்களுக்கு உதவும்

 உங்களின் மருந்தின் பெயரை கொடுத்தால் மார்று பிராண்டுகளையும் அதன்  விலைகளையும் காட்டும் மேலும் நீங்கள் பயன்படுத்தும் மருந்தின் மூலக்கூறிண் பெயர், மருந்தின் பின் விளைவுகளையும்!! அறிந்துக்கொள்ள முடியும். இந்த APP மிகவும் சிறியது  என்பது இதன் சிறப்பு (3MB)

 எல்லோரும் ஒரு வகையில் மருந்து கம்பெனிகளால் ஏய்க்கப்பட்டுள்ளோம். இனியாவது விழிப்புடன் செயல்படுவோம்.

-thameezudeen.

Advertisement

Close