தமுமுக துபை மண்டலம் நடத்திய இரத்ததான முகாமில் இரத்தம் வழங்கிய அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

 

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று 22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது. முகாமில் ஆர்வத்தோடு தமுமுக மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் மாற்றுமத நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் நேரம் போதாத காரணத்தினாலும் பல சகோதரர்கள் இரத்தம் கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அல்லாஹ் அவர்களின் சிறந்த நோக்கத்திற்கு நன்மையை வழங்குவானாக.
சிறப்பாக நடைப்பெற்ற முகாமில் அமீரக தமுமுக செயலாளர் அப்துல்ஹாதி துணைச்செயலாளர் உஷைன் பாஷா தொழிலதிபர் அபுதாஹீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மண்டல தமுமுக செயலாளர் அப்துல்ஹமீது மண்டல பொருளாளர் ஷேக் தாவூத் துணைச்செயலாளர்கள் முஸ்தாக் பொறையார் பர்ஜிஷ், மமக செயலாளர் இப்ராஹீம் உள்ளிட்ட மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்னர்

 
  
  
எல்லாப்புகழும் இறைவனுக்கே

Close