உலகின் மிகச் சிறந்த நாடுகளில் இந்தியாவுக்கு 22-ஆவது இடம்!

downloadஉலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22-ஆவது இடம் கிடைத்துள்ளது. அதிக அளவில் மனித ஆற்றலைக் கொண்டுள்ள போதிலும், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதாவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் உலக நாடுகளை தரவரிசைப்படுத்தி இந்தப் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செய்தி நிறுவனமான ”யு.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட்’ மற்றும் பி.ஏ.வி. பொருளாதாரக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டன.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை ஜெர்மனி பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் கனடாவும், மூன்றாம் இடத்தில் பிரிட்டனும் உள்ளன. நான்காம் இடத்தில் அமெரிக்கா, ஐந்தாம் இடத்தில் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 17-ஆம் இடமும், இந்தியாவுக்கு 22-ஆம் இடமும் கிடைத்துள்ளன. இந்தியாவின் பொருளாதாரமானது வேகமான வளர்ச்சி அடையக்கூடியதாகவும், பன்முகத்தன்மையைக் கொண்டதாகவும் இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் மனித ஆற்றலைக் கொண்டுள்ள போதிலும், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதாவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Close