Advertisement

' />

அதிரை பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு கூட்டம் !

அதிரை பேரூராட்சி மன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு  சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம்    பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்களும் ,வார்டு கவுன்சிலர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர் .

இந்த கூட்டத்தில் அதிரை பகுதியில் குப்பை தேங்குவதையும் அதை அகற்றுவது பற்றி பல ஆலோசனைகள் வழங்கினார்கள்.மேலும் அதிரை பேரூராட்சியில் துப்புறவுப்பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதையும் குப்பை அள்ளும் வண்டிகளும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்

மேலும் இந்த கூட்டத்தில்  அதிரையில் உள்ள 21 வார்டு பகுதிகளிலும் தினமும் பேரூராட்சி ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து குப்பைகள் அள்ளுவது ,பிளாஸ்டிக் பைகளை  ஒழிக்கவும்  கூட்டதில் முடிவு எடுக்கப்பட்டது .


Advertisement

Close