இந்த வருடத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க அறிவியல் அறிஞர்களில் 92 முஸ்லிம்கள்!

தம்ஸன் ரூடர்ஸ் (Thomson Reuters) எனும் யு.கே. யில் உள்ள மல்டி – மீடியா கார்ப்பொரேஷன் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் “2014 ஆம் ஆண்டின் மிக செலவாக்கு மிக்க அறிவியல் அறிஞர்கள்” எனும் தலைப்பில் 3,200 விஞ்ஞானிகளை வரிசைப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வுகளில் மிகவும் அவசியமான துறையில் பெரும் பங்கு வகிப்பவர்கள், யாருடைய அதிகப்படியான ஆய்வு நூலகள் பிற ஆராய்ச்சியாளர்களால் அடிக்கடி மேற்கோடிட்டுக் காட்டப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

51 நாடுகளைச்சார்ந்த அறிஞர்களில் 72 பேர் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள். சவூதி அரேபியா (34), ஈரான் (11), துருக்கி (10), இந்தோனேஷியா (8), ஜோர்டான் (4), மலேஷியா (3) மற்றும் யு.ஏ.இ. (2).

இதில் சவூதி அரேபியா உலகில் 13 ஆவது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் முறையே 24, 26, 28, 34, 40 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.

சவூதி பல்கலைக்கழகங்களின் 34 நபர்களில் பாதிப் பேர் முஸ்லிம்கள். மீதம் உள்ளவர்கள் இந்து, கிருஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களும் அடங்குவர். மேலும் 35 முஸ்லிம்கள் அமெரிக்க, கனடா மற்றும் யு.கே. யில் வெலை செய்பவர்கள். ஒட்டுமொத்தமாக 92 முஸ்லிம்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஈரான், துருக்கி போன்ற நாடுகள் முன்பே அறிவியலில் ஆய்வு வெளியீடுகளில் முன்னணி நாடுகளாக இருந்து வருகின்றன. ஆனால் இவ்வாண்டு அறிவியல் படிக்கட்டின் உச்சாணியை சவூதி அரேபியா தொட்டிருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல், இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் முறையே 20, 22 மற்றும் 29 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. எனவே சவூதி அரேபியா இஸ்ரேலை விட 7 இடங்களும், இந்தியாவை விட 9 இடங்களும் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் 4 முஸ்லிம் நாடுகள் ரஷியா உள்ளிட்ட 11 மேற்கத்திய நாடுகளி பின்னுக்குத் தள்ளியுள்ளன.

கடந்த ஆண்டுகளில் சவூதி அரசாங்கம் செய்த கல்வி சீர்திருத்தத்தின்பலனாக அந்நாடு “தாமஸ் ரூடர்ஸ்” பட்டியலில் முதலிடம் வகிக்கும் முஸ்லிம் நாடாக மலர்ந்துள்ளது. மேலும் அந்நாடு கல்வி மற்றும் அறிவியல் ஆய்வுக்காக அத GDP யிலிருந்து 10 சதத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது.

பட்டியலில் உள்ள 3200 அறிஞர்களில் 3 சதவீதம் தான் முஸ்லிம்கள் என்றாலும் அறிவியல் துறையைப் பொறுத்தவரை இது மிக நல்ல முன்னேற்றம் தான். இப்பட்டியலில் அமெர்க்கா முதலிடமும் யு.கே மற்றும் சீனா இரண்டாவது மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. பல மேற்கத்திய நாடுகளுடன் சில முஸ்லிம் நாடுகள் அறிவியல் அரங்கில் போட்டியிடுவது மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய விஷயமே! 

                                    அல்ஹம்துலில்லாஹ்நன்றி: தாமீரே ஃபிக்ர்

Advertisement

Close