அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா (படங்கள் இணைப்பு)

  இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 67வது குடியரசு தின விழா கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை பேரூராட்சி, காவல்நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் இந்த விழாவினை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் இன்று காலை 8:30 மணியளவில் இந்த நிகழ்ச்சி துவங்கியது. பள்ளி மாணவரின் இனிய கிராஅத் க்கு பிறகு பள்ளியின் தமிழ் ஆசிரியர் திரு.குணசேகரன் அவர்கள் வரவேற்ப்புறையாற்றினார்கள். இதனை தொடர்ந்து காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஹ்பூப் அலி அவர்கள் கொடியேற்றி சுதந்திர சிறப்புரையாற்றினார்கள்.

இதில் மாணவர்கள் தேசிய உறுதிமொழி, கொடிப்பாட்டு மற்றும் தேசிய கீதத்தினை தங்கள் நாவால் வாசித்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி முழுவதையும் பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர் அஜ்முத்தீன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

அனைவருக்கும் அதிரை பிறையின் சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

   
    
    
   

Close