Advertisement

' />

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம்
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், கடந்த 31–ந் தேதி நள்ளிரவு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

கச்சா எண்ணெய்
அந்த விலை குறைப்புக்கு பிறகு, கடந்த 7 நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்து வருகிறது. கடந்த 31–ந்தேதி, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 ஆயிரத்து 209 ரூபாய் 96 காசுகளாக இருந்தது. அது, தற்போது பீப்பாய்க்கு 4 ஆயிரத்து 939 ரூபாய் 44 காசுகளாக சரிந்துள்ளது. அதாவது, 5.19 சதவீதம் விலை சரிந்துள்ளது.

விலை குறையும்
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்துள்ளதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விலை குறைப்பு அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15–ந்தேதி வாக்கில் வெளியிடும் என்று கருதப்படுகிறது.

நன்றி: தினத்தந்தி

Advertisement

Close