பட்டுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி!(படங்கள் இணைப்பு)

முன்பெல்லாம் பள்ளி விளையாட்டு தினம், கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் நாம் கயிரு இழுக்கும் போட்டியை கண்டிருப்போம்.தற்போது பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் நடத்தும் மாநில அளவிலான கயிறு இழுத்தல் போட்டி  பட்டுக்கோட்டையில் துவங்கியுள்ளது.

பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி இன்று மாலை 3:30 மணியளவில் துவங்கியது. தொடக்க விழாவில் வரவேற்புரை திரு.D.ரவிச்சந்திரன் (உடற்கல்வி இயக்குனர்) வரவேற்புரை வழங்கினார் .Rtn.M.பாண்டியன் (தலைவர் ,பட்டுகோட்டை ரோட்டரி சங்கம்)தலைமை தாங்கினார்.முன்னிலை Rtn.Major donor Dr.C.V.பத்மானந்தன் (துணை ஆளுநர் ,மண்டலம் -21) வகித்தார் சிறப்பு விருந்தினராக Rtn.J.லியோன் சேவியர் (Dist.CoOrdinator,Public Image) அழைக்கப்பட்டு இருந்தார். மேலும்  பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இன்று காட்சி ஆட்டமாக நெய்வேலி அணியும் புதுச்சேரி அணியும் மோதின. இதில் மாநில அளவிலான 25 அணிகள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளானர்.

இதில் பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர். இந்த வித்தியாசமான போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனர்.

நாளை இப்போட்டி நிறைவடைந்து பரிசளிப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

குறிப்பு: இப்போட்டியை ரியோடி ஜெனிரோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது .


படங்கள் மற்றும் செய்தி :காலித் அஹ்மத்

Advertisement

Close