TNCA கிரிக்கெட் லீக் போட்டியில் தஞ்சாவூர் அணியை வீழ்த்திக் அதிரை AFCC அணி வெற்றி

AFCC2016-17 ஆம் ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தலை சிறந்த அணிகள் கலந்துக்கொள்ளும் TNCA கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்று துவங்கின. இதன் முதல் லீக் போட்டியில் அதிரை AFCC அணியும் BJM தஞ்சாவூர் அணியும் மோதினர். டாஸ் வென்ற AFCC அணி முதலில் பேட் செய்ய தீர்மாணித்தது. எதிரணியின் பலமான பந்துவீச்சு காரணமாக 25 ஓவர்களில் அதிரை AFCC அணி 84 ரண்களை மட்டுமே குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்ரான் 29 ரண்களும், N.இப்ராஹிம் 19 ரண்களும், A.இப்ராஹிம் 10 ரண்களும் இதர வீரர்கள் சொற்ப ரண்களில் ஆட்டமிழந்தனர்.

25 ஓவர்களில் 85 ரண்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தஞ்சை BJM அணி AFCC அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் துவக்கத்தில் இருந்து ரண்களை குவிக்க திணரினர். இறுதியாக AFCC அணி 32 ரண்கள் வித்தியாசத்தில் தஞ்சை BJM அணியை வீழ்த்தியது. பந்துவீச்சை பொறுத்தவரை AFCC வீரர் சலீம் 6 ரண்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், கஃபூர் மற்றும் இம்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற அதிரை AFCC அணிவீரர்களுக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறொம்.

வரும் ஏப்ரல் மாதம் தமிழக அளவிலான தலை சிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொள்ளும் கிரிக்கெட் தொடர்போட்டி நடைபெறவுள்ளது. இதில் விளையாடும் வாய்ப்பு அதிரை AFCC அணிக்கு பிரகாசமாக உள்ளது.

Close