ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் 76 வது இடத்தில் இந்தியா!!

600px-india_against_corruption_2015ம் ஆண்டு ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா 76வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, குறைந்த ஊழல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக லோக்சபா தேர்தல், டில்லி சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் ஊழல் பிரச்னை பெரும் பங்காற்றியது. இந்நிலையில் 2015ம் ஆண்டு உலக அளவில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சிபிஐ ( Corruption Perceptions Index ) வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 168 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 76 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 85வது இடத்தில் இந்தியா இருந்தது. அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான், சீனா, இலங்கை போன்றவை கடந்த ஆண்டில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் பூடான் 2வது இடத்திலும், சீனா 83வது இடத்திலும், வங்கதேசம் 139 வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் சிறிதளவே முன்னேற்றம் கண்டுள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் ஊழலை தடுக்க புதிய முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.

2014 மற்றும் 2015ல் இந்தியாவின் நிலை வெகுவாக மாறி உள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை கேள்வி கேட்டும் நிலைக்கு மக்கள் வந்துள்ளனர் எனவும், இந்தியாவில் ஊழல் குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகள் தவிர்த்து ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதல் இடத்திலும், பின்லாந்து 2வது இடத்திலும் உள்ளன. ஸ்வீடன் 90வது இடத்தில் உள்ளது. ஊழல் இல்லாத டாப் 5 நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து இடம்பிடித்துள்ளது. உலக அளவில் 68 சதவீதம் நாடுகளில் ஊழல் பெரிய பிரச்னையாக இருந்து வருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவீதம் நாடுகள் ஜி20 உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-dinamalar

Close