அதிரையில் SDPI கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

sdpi adiraipiraiஎஸ்டிபிஐ கட்சி சார்பில் ஜனவரி10 ம் தேதி முதல் பிப்ரவரி 10 ம் தேதி முடிய ஒரு மாதத்திற்கு மாநிலம் தழுவிய தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகில் நேற்று காலை 10 மணிக்கும், அதிரை பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார், துணை தலைவர் நட்ராஜ், இக்பால், அன்வர், இப்ராஹிம்  மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ. அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தூய்மையான அரசியல், ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்பு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி எஸ்டிபிஐ கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் பலர் எஸ்டிபிஐ கட்சியில் புதிதாக சேர்ந்தனர்.

Close