அதிரை மீனவரின் தலைமையில் 5 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரதம்!


தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் சு.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை உயர் நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோரை மீனவ அமைப்புகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தின.
இதையடுத்து அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவிலில் நாட்டுப்படகு மீனவசங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் துணைத்தலைவர் நாகேந்திரன், செயலாளர் சீனிகுப்பு, வீரையன், முருகன், அப்பாச்சாமி, ஜீவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அந்தந்த பகுதியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

Close