லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து வாழும் முன்மாதிரி மாவட்ட ஆட்சியர்!

உ. சகாயம் (பிறப்பு : 3 ஜூலை 1962) 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர்.

தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் தமிழக இ.ஆ.ப அதிகாரியாவார் .அவை முறையே , மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கடனுதவித் திட்டம் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு , வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு.

பிறப்பு , படிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை – சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாக பிறந்தவர்.பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.

பணிக் கொள்கை
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது அவரது தாரக மந்திரம் ஆகும். இந்த வாசகத்தை அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். இவரது இந்த கொள்கையின் காரணமாக, அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதவிகள்
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர், சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வணிகத்துறை இணை இயக்குநர், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் மதுரை மாவட்ட ஆட்சியர் கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநர்.

குறிப்பிடத்தக்க செயல்கள்
கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் “If you have power, use it for the poor” – உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து. என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.

காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்த போது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு பூட்டினார்.

நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு பரபரப்பேற்படுத்தினார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்பட்டது.

கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார்.

நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும் தொடுவானம் என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார். கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார்.

மதுரையில் ஆட்சியராக இருந்த போது அங்கே ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார்.

கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆண்டு பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

பரிசுகள் / விருதுகள்
2011-ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார் ,சிறந்த ஆட்சியர் பரிசு

எதிர்ப்புகள்
சகாயம் நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது அப்போதைய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தி.மு.க.வின் வி.பி.துரைசாமி ஒரு இதழுக்கு சகாயத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேட்டி அளித்தார். இதனை எதிர்த்து சகாயம் துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு 

குறிப்பிடத்தக்க செயல்கள்
சாலை ஒரத்தில் கொடிகம்பத்தின் கீழ் கைலியுடன் படுத்துகிடந்து மணல் கடத்தல் மற்றும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை மடக்கிபிடித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் திரு. சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருந்த பொழுது மணல் திருட்டுகளை தடுக்கவும் மண்ணெண்ணெயில் ஒடும் லாரிகளை பிடிக்கவும் முடிவு செய்தார்…

மாறு வேடம் அணிந்து கைலி பனியனுடன் சாலையின் ஓரத்தில் படுத்துக்கொண்டு நோட்டமிட்டார் இரவு 1 மணிக்கு அந்த வழியாக வந்த லாரிகளை திடீரென மடக்கிப்பிடித்தார் …. அருகில் தான் காவல் நிலையம் ஆனால் அவர்களுக்கு இது தெரியாது ….

அத்தனை லாரிகளையும் பறிமுதல் செய்த பின்புதான் அவர்களுக்கு தெரிந்தது …காரணம் அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்…. இரவு நேரத்தில் கலெக்டரை கண்டதும் அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் தினறினர். மொத்தம் 13 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன …

மேலும் பல இடங்களில் இரவு நேரந்தில் சாதாரண மனிதர்போல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு கையில் பேட்ரிலைட் கைலி சகிதமாக ஒரு சில பகுதிகளில் நடந்து செல்வாராம் …
அடுத்த நாள் காலையில் காவல் துறையினர் எங்கெங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற பட்டியலை சோதனை செய்வாராம் . அப்படி தவறு செய்யும் காவலர்களுக்கு உடனே சஸ்பென்ஷன் தானாம் … நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் இவரை எப்போது இடமாற்றம் செய்வார்கள் என்று தவமாய் தவமிருந்தனர்…

இவரை போன்ற எல்லா அரசு அதிகாரிகளும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து வாழும் வாழ்ந்தால் இந்தியா அன்றைக்கு தான் வல்லராசாகும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரே ஆட்சியர் …
திரு.சகாயம் அவர்கள் …

சில நாட்களுக்கு முன்னர் WE WANT SAGAYAM YOU AS CM (சாகாயம் முதல்வராக வேண்டும்) என்ற முக நூல் பக்கம் துவங்கப்பட்டு லைக்குகள் அதிகளவில் விழுந்தவாறு உள்ளன.

Advertisement

Close