புகாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு நாளில் ஏராளமானோர் பங்கேற்பு !

அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 25-09-2014 அன்று முதல் நடைபெற்று வந்ததது.இதனை அடுத்து புகாரி ஷரீப் மஜ்லிஸ் இன்று நிறைவு பெற்றது .இன்று சுபுஹு தொழுதவுடன் திக்ரு மஜ்லிஸ் ஆரம்பமாகி ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு துஆவுடன் நிறைவு பெற்றது .  

இன்றைய நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட கலந்துகொண்ட அனைவருக்கும் நெய்சோறு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வழக்கம் போல் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


Advertisement

Close