அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரில் சுழற்கோப்பை கைப்பற்றி அசத்திய திருச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம்
ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (21-05-2015) மாலை 5 மணியளவில்
ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்றைய தினம்  இத்தொடரில்
இறுதி போட்டி நடைபெற்றது இதில் திருச்சி அணியும் தென்னரசு பள்ளத்தூர் ணியினரும் மோதின.
மிகவும் எதிர்பார்ப்புடன்  ரசிகர்களின் கரகோஷங்களுக்கு
மத்தியில் துவங்கிய இப்போட்டி துவக்கத்திலிருந்தே பரபரப்புடன் நடைப்பெற்றது. முதல்
பகுதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளின் பலம் வாய்ந்த டிஃபென்ஸ் வீரர்களின் ஆட்டத்தால்
அணிகள் கோல் போட முடியாமல் திணறினர். இரண்டாம் பகுதி நேர ஆட்டத்திலும் இதே நிலை தான்
நீடித்தது. இறுதியாக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டத்தின் வெற்றியாளர்களை
தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் திருச்சி அணி 4 கோல்களும்
பள்ளத்தூர் அணி 3 கோல்களும் அடித்தனர். இதன் மூலம் திருச்சி அணி AFFA கால்பந்தாட்டத்
தொடரின் 12ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை கைப்பற்றி அசத்தியது. வெற்றி பெற்றது திருச்சி
தான் என்றாலும் பள்ளத்தூர் அணியினரும் இவர்களுக்கு நன்றாக ஈடு கொடுத்து விளையாடி ரசிகர்களுக்கு
நல்லதொரு ஆட்டத்தை வழங்கினர்.
இதனை அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
பரிசளிப்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. விழாவினை முனவர் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.
வரவேற்றுபுரையை அஹமது ஹாஜா வழங்கினார். வாழ்த்துரையை பேரா.அஹமது கபீர் சார் அவர்கள்
வழங்கினார்கள். இன்றைய தினம் AFFA அணி வீரர்கள் அஜார் அவர்களும் ஃபாயாஸ் அவர்களும்
லைன் அம்பயர் பணியை சிறப்பாக ஆற்றினர்.
இத்தொடர் முழுவதும் திரு.வாசுதேவன்
அவர்கள் சிறப்பான நடுவர் பணியாற்றினார்கள். இத்தொடர் முழுவதும் SIS முஹம்மது அவர்கள்
சிறந்த கமென்ட்ரியை வழங்கி தொடரினை விறுவிறுப்பாக கொண்டு சென்றார். இத்தொடரின் ஏற்பாடுகளை
AFFA அணியின் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர். அடுத்த ஆண்டு இதை விட சிறப்பான
ஆண்டாக AFFA அணிக்கு அமைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close