அதிரை புஹாரி ஷரீப் மஜ்லிஸிக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக புஹாரி ஷரீப் மஜ்லிஸ் நடைபெறுகிறது .இந்த ஆண்டுக்கான புஹாரி ஷரீப்  கடந்த 25-09-2014 அன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற புஹாரி ஷரீப் மஜ்லீஸில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் .அ.தமிழ்மகன்  உசேன் வருகை தந்து கலந்துகொண்டார். இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.

இன்ஷா அல்லாஹ் நாளை (06-11-2014) வியாழக்கிழமை அன்று புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு பெறுகிறது.  

Advertisement

Close