Advertisement

' />

அதிரை ஹாஜா நகரில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்! அச்சத்தில் மக்கள் !(படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதியில் மின் கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உடைந்து விழுவது போல் இருந்து வருகிறது. இதனை அடுத்து அப்பகுதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன் அளித்த புகாரின் அடிப்படையில் இப்பகுதிக்கு புதிதாக சிமெண்ட் மின் கம்பம் கொண்டுவரப்பட்டது.

இந்த மின்கம்பம் கொண்டுவரப்பட்டு 4 மாதங்களாகியும் பழைய கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் பொருத்தப்படவில்லை என்கின்றனர் அப்பகுதியினர். தற்பொழுது அந்த பழைய கம்பத்தின் நிலை மேலும் மோசமாகி எப்பொழுது வேண்டுமானாலும் விழும் இக்கட்டான நிலையில் உள்ளது.இது பற்றி அதிரை மின் வாரியத்துக்கு பல முறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

மேலும் இந்த மின் கம்பத்தின் அடிவாரத்தில் குடிநீர் குழாய் ஒன்றும் உள்ளது. நாளொன்றுக்கு பெண்கள் பலர் இங்கு வந்து அச்சத்துடன் தண்ணீர் பிடித்து செல்லும் நிலை உள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹாஜா நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட மின்கம்பத்தை உரிய இடத்தில் உடனே பொருத்துமாறு அப்பகுதி மக்களின் சார்பாக அதிரை பிறை சார்பாகவும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்: அல் மஹ்ஷிப் (அதிரை ஹாஜா நகர்)

Advertisement

Close