Advertisement

' />

தாயகத்திலிருந்து வளைகுடா வரும் சொந்தங்களின் கவனத்திற்கு !

1461697_
தாயகத்திலிருந்து வளைகுடா வரும் சகோதரர்கள் ரத்தக் கொதிப்பு, Sugar, கொலஸ்ட்ரால் மற்றும் இருதயம் போன்ற நோய்களுக்கான மருந்துகளை வருடக்கணக்கில் கணக்கிட்டு வாங்கி வந்து சாப்பிடுகிறார்கள்.
அல்லது
இங்கே பணியில் இருக்கும் சகோதரர்கள் ஏற்கனவே தாயகத்தில் அவரது மருத்துவர் கொடுத்த பரிந்துரை சீட்டின்படி மாதக்கணக்கிற்கான மருந்துகளை வாங்கி வரச் சொல்லி சாப்பிடுகிறார்கள்.
சகோதரர்களே! தற்போதைய நிலையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கம்யூட்டரின் ஆரம்ப காலத்தில் dos கமென்டில் ஆரம்பித்து வின்டோஸ் 3.1, வின்டோஸ்3.11, வின்டோஸ் 95, வின்டோஸ்98 என்று தொடங்கி இன்று வின்டோஸ் 8.1 ல் பயணிக்கிறோம். காலத்திற்கேற்றார் போல் அதன் தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அது போல் அயல்நாடுகளில் மருத்துவத்துறையில் உள்ள மருத்துவர்கள் ஒவ்வொரு 6 மாதம் அல்லது 1 ஆண்டுகளில் அவர்களின் மருத்துவ அறிவை புதுப்பித்துக் கொள்கிறார்கள் என்ற தகவலை சமீபத்தில் மருத்துவத் துறையைச் சார்ந்த நண்பர் ஒருவரிடம் அந்தத் துறை சார்ந்த உரையாடலின் போது அறிய முடிந்தது. அந்த மருத்துவர்களின் மருத்துவ அறிவை மேம்படுத்த புதிய நுட்பங்களுடன் மருந்து தயாரிக்கும் அந்தந்தக் கம்பெனிகளே அவர்களுக்கு ஸ்பான்சர் செய்து மேலைநாடுகளுக்கு அனுப்பி புதிய தொழில் நுட்பங்களை படித்துக் கொள்ளும் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது என்ற தகவலையும் சொன்னார். அதற்கான ஏற்பாடுகளை அந்த மருத்துவர்கள் பணியாற்றும் மருத்துவமனைகள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றன அதன் மூலம் மேலைநாடுகளில் உள்ள மருத்துவர்களின் மருத்துவ அறிவு complete updated என்று தெரிய முடிகிறது.
இதே போன்று நம் நாட்டு மருத்துவர்களும் தங்களின் மருத்துவ அறிவை காலத்திற்குத் தகுந்தார்போல் புதுப்பித்துக் கொள்கிறார்களா !?
ஒரு சில பெரிய மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்களைத் தவிர நம் நாட்டு மருத்துவர்கள் தங்களின் மருத்துவ அறிவை மேம்படுத்திக் கொள்கிறார்களா என்ற கேள்வியே உள்ளது.
ஆகவே அயல் நாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் பணியாற்றும் நம் சகோதரர்கள் நம் நாட்டு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரை மருந்துகளை வருடக்கணக்கில் வாங்கி வந்து வெளிநாட்‍டில் வாழும் நீங்கள் சாப்பிட வேண்டாம். காரணம் நம் நாட்டு தட்ப வெட்ப சூழல், அயல் நாட்டு தட்பவெட்ப சூழல், நம் நாட்டு மற்றும் அயல் நாட்டு உணவு பழக்கவழக்கங்கள், வெளிநாட்டில் வாழும் நீங்கள் குடும்பத்தை பிரிந்துள்ள மனச்சுமை போன்ற காரணங்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும் ஆகவே உங்கள் நோய்களுக்குத் தேவையான மருந்துகளை நீங்கள் வாழும் நாட்டில் உங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து அதன் பரிந்துரையின் படி மருந்துகள் சாப்பிடுங்கள்.
நம் நாட்டில் மருந்துகளின் விலை மலிவு என்பது உண்மை. வெளிநாட்டில் உள்ள மருந்துகளின் விலை அதிகம்தான் ஆனால் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு உள்ளதால் விலையைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை.
சர்வதேசத் தரம், சர்வதேசத் தரம் என்று பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பார்த்திருப்பீர்கள். உங்கள் உடல்நலனை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் வாழும் நாட்டிலேயே சர்வதேசத் தரத்தில் சிகிச்சை அளித்துக் கொள்ளுங்கள்.
நன்றி: ஹூஸைன்கனி

Advertisement

Close