அதிரையில் ரூ.43.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் ஒரு வாரத்தில் துவக்கம் !

அதிரை பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிராம்பட்டினம் நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து 8 குளங்களுக்கு நீர் நிரப்ப கலெக்டர் உத்தரவிட்டார். வறட்சி காலங்களில் ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

 பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.43.50 லட்சம் மதிப்பிலான பணிகள் ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்படும். 8 குளங்களுக்கு நீர் நிரப்பும் பணி 2 மாத காலத்திற்குள் முடிவடையும் என கலெக்டர் தெரிவித்தார்.

 ஆய்வின்போது பேரூராட்சிகளின் மண்டல உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் இளவரசன், பேரூராட்சித் தலைவர் அஸ்லம், துணைத் தலைவர் பிச்சை மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Close