அடினோ வைரஸ் என்ற கிருமி மூலம் ‘மெட்ராஸ் ஐ’ பரவுகிறது. அதுவும் இந்த மாதத்தில் ‘மெட்ராஸ் ஐ’ வருவதற்கு, பருவகால நிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடும். அதனால், ‘மெட்ராஸ் ஐ’ பாதித்த நோயாளிகள் உபயோகப்படுத்திய கண்ணாடி, துணி, சோப்பு உள்ளிட்ட எந்த பொருட்களையும் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கண் மருந்தை வாங்கி வீட்டில் உள்ள அனைவரும் போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கண் சிவப்பது, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் வீக்கம் போன்றவை ‘மெட்ராஸ் ஐ’ அறிகுறிகளாகும். அதனால் மெட்ராஸ் ஐ வந்தால், உடனடியாக கண் டாக்டரிடம் சென்று முறையான சிகிச்சைப் பெற வேண்டும்.

‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கு சிகிச்சைப் பெறாவிட்டால், கண்ணின் கருவிழி பாதிக்கும். அதன்பின் கண் பார்வை இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

' />

அதிரையில் வேகமாக பரவிவரும் மெட்ராஸ் ஐ! கூலிங்க் கிளாஸுடன் திறியும் சிறுவர்கள்!

நம்ம ஊர்ல யாராப்பாத்தாலும் கண்ணுல கூலிங் கிளாஸ் போட்டுட்டு  அலையிரானுங்கபா.  சரி என்னான்டு போய் கேட்டா கண்ணு வலியாம் … சரி கண்ணாடிய கலட்ட சொல்லிட்டு பாத்தா மெட்ராஸ் ஐ! அவன் கண்ண பாத்தவுடனே எனக்கு கண்ணுத்தண்ணீர் வந்துருச்சு. அவன் கேக்குறான் என் கண்ண பாத்து நானே அழுகல, நீங்க ஏன் அழுகுறிங்கன்டு. 

என்னாங்க, இதைப்படிக்கும் போது உங்களுக்கும் கண்ணுத்தண்ணீர் வருதா!

இந்த கண்ணு வலி .. அதாங்க  மெட்ராஸ் ஐ… ஒருத்தவங்களித்தில் இருந்து மற்றவர்களுக்கு பரவுமாம்.. 

மெட்ராஸ் ஐ வருவதற்கான காரணங்கள்:

மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக கோடைக்காலமான ஜூன், ஜூலை மாதத்தில் ‘மெட்ராஸ் ஐ’ வழக்கமாக காணப்படும். ஆனால் தற்போது மழை, வெயில் என மாறி மாறி வருவதாலும் வருகிறது. இந்த பருவகால மாற்றத்தினால். ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

மெட்ராஸ் ஐ யை எதிர்க்கொள்வது எப்பது?

Close