தேசிய மற்றும் மாநில கைப்பந்து தொடர்களில் விளையாடிய அதிரை இளைஞர் ஆசிப் !

அதிராம்பட்டினம் ,மேலத் தெருவை சேர்ந்த V.M.அலி அக்பர் அவர்களின் மகன் ஆசிப் அஹ்மத் இவர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் B.C.A  இந்த வருடம் முடித்து உள்ளார் . சிறு வயதில் இருந்தே கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் .

இவர் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பல போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளார் .இவர் தமிழகம் மற்றும் அல்லாமல் வெளிமாநிலங்களிலும் தனது விளையாட்டு திறமையை காட்டி உள்ளார் . தற்போது இவர் தமிழகத்தில் கைப்பந்து விளையாட்டில் தனக்கு என ஒரு பெயர் படைத்து உள்ளார் .அது மட்டும்யின்றி தேசிய மற்றும் மாநில கைப்பந்து தொடர்களில் பல முக்கிய ஆட்டங்களில் விளையாடி உள்ளார் .அதன் விபரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது
 
 முக்கிய ஆட்டங்கள் :


1.INTER University,

2.Chief minister State Match, 
3.Tamilnadu Junior State,
4.Indian Overseas Bank match ,
5.All India Volleyball Tournament in Hyderabad,
6.S.R.M University Chancellor Trophy,
7.St.Joseph Centery Tropy,
8. Tamil Nadu Mercantile Bank Trophy. Madurai.

இது போன்ற 15 க்கும் மேற்ப்பட்ட  முக்கிய ஆட்டங்கள் விளையாடி உள்ளார் .

இது குறித்து ஆசிப் -யிடம் கேட்ட போது:

சிறு வயது முதல் கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு .நாமும் கைப்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது .இதற்காக அல்லாஹ்வின் உதவியோடு பல முயற்சிகள் எடுத்தேன் .அதற்குரிய வெற்றியையும் பெற்றேன் .மேலும் பெறுவேன் என்றார் .

இவருக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு பயிற்சியாளர் Dr.சுவாமி நாதன் அவர்களுக்கும் ,அதிரை பயிற்சியாளர் ஷாகுல் ஹமீது அவர்களும் ,தனது  பெற்றோர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் . 

இவர் கைப்பந்து போட்டிகளில் மேன்மேலும் சாதித்து பெற்றோருக்கும், ஊருக்கும் பெருமை தேடித்தர மனதார வாழ்த்துகிறது அதிரை பிறை இணையதளம் .

Advertisement

Close