கீழக்கரை முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்கிறார் காலிக் (யுவன் சங்கர் ராஜா)!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற உள்ளது.

தந்தை இளையராஜா வழியில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை திருப்பதியில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாத்திற்கு மாறினார்.

தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துபாயில் நடக்க உள்ளது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

இந்த திருமணம் குறித்து அதிரை பிறை சார்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் தொடர்பு கொண்ட போது அவர் துபாயில் இருப்பதால் பெண் வீட்டாரிடம் தகவல் பெறப்பட்டது. இதற்க்காக ஆடியோ விரைவில் வெளியிடப்படும்.

Advertisement

Close