அதிரை கரிசல்மணி ஏரி நீர் மட்டத்தை குறைக்க மழவேனிற்காடு அன்னா நகர் குடிசை பகுதியினர் கோரிக்கை!

அதிரையில் தற்பொழுது பம்பிங் மூலம் கரிசல்மணி ஏறி நிறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தொடர்ந்து பெய்த கனமழையாலும் இந்த ஏரி நிறம்பியுள்ளது. இதனால் கரிசல்மணி ஏரிக்கரையில் வசிக்கும் மழவேனிர்க்காடு அன்னா நகர் கிராமத்தை குடிசைகள் தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த பகுதியில் மொத்தம் 48 குடிசைகள் உள்ளன. இந்த ஏறி முழுமையாக நிறம்பியுள்ள காரணத்தால் இந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இவர்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது.  இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குமார் அவர்கள் நமது செய்தியாளரிடம் கூறியதில் “கடந்த 3 நாட்களாக எங்கள் குடிசை பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் எங்கள் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. இந்த வெள்ளத்தை பார்வையிட தாசில்தார், ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரி ஆகியோர் வந்தனர். அவர்களிடம் நாங்கள் கரிசல்மணி ஏரி நீர்மட்டத்தை ஒரு அடி குறைக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அதற்கு அவர்கள் நாங்கள் இருக்கும் பகுதி ஏரி புறம்போக்கு பகுதி எனவும் இதனை தற்போதைக்கு காலி செய்துவிட்டு வேறு பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் கூறினர். எங்கள் வீடுகளுக்கு மின்சார இனைப்பு உள்ளது. தவறாமல் வீட்டு வரி கட்டிவருகிறோம். இந்நிலையில் பல வருடங்களாக இங்கேயே தங்கிவிட்டு திடீரென காலி செய்ய சொன்னால் நாங்கள் என்ன செய்வது என்று கூறினார்”

மழவேனிற்காடு அன்னா நகர் பகுதி மக்களின் துயர் துடைக்க அப்பகுதியில் உள்ள குடிசைகளில் புகுந்துள்ள வெள்ள நீர் வடிவதற்கு கரிசல்மணி ஏரியில் நீர்மட்டம் ஒரு அடி குறைக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! 

Advertisement

Close