டீலர் கமிஷன் உயர்வு எதிரொலி ! சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ. 3 உயர்ந்தது !

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. 

14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய் 40.71 கமிஷனாக வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனையேற்று, இந்த கமிஷன் தொகையை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டருக்கு ரூபாய் 43.71 கமிஷனாக வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. இதனையடுத்து, இந்த கமிஷன் உயர்வு வாடிக்கையாளர்களின் விற்பனை விலையில் எதிரொலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை 401 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை, இனி 3 ரூபாய் அதிகரித்து, 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலையிலும் கூடுதலாக 3 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close