Advertisement

' />

விரைவில் அறிமுகமாகும் ஜன்னல்களற்ற விமானங்கள் !

நிமிடத்திற்கு நிமிடம் பல தொழிநுட்பங்களை அனுபவித்துவரும் தற்போதய உலகில், கண்டறியப்பட்ட தொழிநுட்பங்களை பயன்படுத்தி முடிவதற்கிடையில், மற்றுமொரு தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனடிப்படையில் அடுத்த சந்ததியினருக்காக ஜன்னல்களற்ற விமானங்களை விமாங்களை உற்பத்தி செய்வதற்கு விமான நிறுவனங்கள் ஆலோசித்துள்ளன.

என்னதான் தொழிநுட்பம் நிமிடத்துக்கு நிமிடம் வளர்ந்துவந்தாலும், விமானத்தின் தொழிநுட்பத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடியவில்லை என விமான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானத்தின் ஆடம்பரங்களும், உணவு வகைகளும், பிளங்கட், தலையணைகளில் அவ்வப்போது புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், நவீன விமானங்கள் அறிமுகமான 1970-80களில் காணப்பட்ட அதே தொழிநுட்பங்களே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.

விமானத்தின் அளவிலும், வேகத்திலுமே சில மாற்றங்கள் காணப்படுகிறதே தவிர, அன்றைய விமானம்போல்தான் இன்றைய விமானங்கள் மாற்றமின்றி வானத்தில் உலாவி வருவதையும் எம்மால் காணமுடிகிறது.

நித்திரையிலும், மன உளைச்சலிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஓர் உற்சாகத்தையும், வித்தியாசத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ஜன்னல்களற்ற விமானங்களை உற்பத்தி செய்வதற்கு விமான நிறுவனங்கள் தற்பொழுது உத்தேசித்து வருகின்றன.

மூலை ஆசனங்களில் விரும்பி உட்கார்ந்து காட்சிகளை இரசிப்பதற்கு எல்லாப் பயணிகளுக்குமே விருப்பம்தான். ஆனால் விமானத்தில் பயணிக்கும் எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பம் அமைவதில்லை.

இத்தகைய ஜன்னல்களற்ற விமானங்களில் ஏறியவுடன் ஓர் பளிங்கு அறைக்குள் அல்லது கண்ணாடி மாளிகைக்குள் உட்பிரவேசித்த உணர்வைக் காண முடியும். அதே போல், பகலில் அதிக வெளிச்சம் விமானத்திற்குள் நுழையும்போது, விசேட கண்ணாடிகள் வெளிச்சத்தைக் குறைத்து மிதமாக மாற்றும். அதேபோல் நித்திரை செய்ய விரும்பும் பயணி, கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை பயன்படுத்தி, ‘நைட் மோட்’ இற்கு மாற்றி உறங்க முடியும்.

அதிநவீன தொழிநுட்பத்தில் உருவாக உத்தேசித்துவரும் இத்தகைய கண்ணாடிகளுடனான ஜன்னல்களற்ற விமானங்கள் அடுத்த சந்ததியினருக்காக உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் சாதக, பாதக மற்றும் அபாய பரீட்சார்தியத்தின் பின்னர், ஒரு சில ஆண்டுகளிலேயே உலகிற்கு இத்தகைய விமானங்கள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Close